ரஞ்சன் ராமநாயக்கவின் உயிருக்கு ஆபத்து.? சிறைச்சாலை நுழைவாயிலிருந்து பகிரங்கப்படுத்திய சஜித்?

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில், சிறை தண்டனை அனுபவித்துவரும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு சென்று, இன்று (22) கலந்துரையாடியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,இதன்போது, தற்போதைய சட்ட நிலைமையை விளக்கிய சஜித் பிரேமதாஸ, ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்துக்கு அழைப்பது குறித்து பேசியதாக அறியமுடிகிறது.இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இவ்வாறு தெரிவித்திருந்தார்.ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற இருக்கை பாதுகாப்பானது,ஆனால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்ற தகவலையும் வெளியிட்டிருந்தார்.இந்த விஷயத்தில் அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனவும், ரஞ்சன் ராமநாயக்கவுக்காக தனது கட்சி எப்போதும் முன் நிற்கிறது என்றும் சஜித் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.