நாட்டு மக்களுக்கு சற்று நிம்மதி தரும் செய்தி…தீவிர சிகிச்சைப் பிரிவில் எவரும் இல்லை..!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய எவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் எந்தவொரு நோயாளியும் தற்பொழுது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.தற்பொழுது ஐ.டி.எச் தொற்று நோயியல் வைத்தியசாலையில் அதிகளவில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கு மேலதிகமாக முல்லேரியா, இரணவில, வெலிகந்த, காத்தான்குடி, ஆகிய வைத்தியசாலைகளில் கொரோனா நோய் தொற்றுக்கு இலக்கானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.