யாழ். குறிகட்டுவானிலிருந்து புறப்பட்ட படகில் சென்ற இருவர் திடீர் மாயம்..!!

யாழ்.புங்குடுதீவு குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு பயணமான படகு ஒன்றில் பயணித்த இருவர் காணாமல்போயுள்ளதாகவும், ஆட்களற்ற நிலையில் படகு நெடுந்தீவில் கரையொதுங்கி உள்ளதாகவும் கூறப்படுகின்றது. நேற்று மதியம் 1 மணியளவில் குறிகட்டுவானில் இருந்து இருவர் படகு மூலம் நெடுந்தீவுக்கு பயணமானதாகவும் பின்னர் ஆட்களற்ற நிலையில் படகு கரை ஒதுங்கியதாகவும் படகில் அவர்கள் ஏற்றிவந்த ஐஸ் கட்டிகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.இந்நிலையில், படகில் பயணித்தவர்களை தேடும் நடவடிக்கை கடற்படை மற்றும் மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. குறித்த சம்பவத்தில் ஞானசிங்கம் றொபின்சன் (வயது43), மரியவேதநாயம் நெயன் (வயது20) ஆகிய இருவரே காணாமல்போயுள்ளனர்.