கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிபயங்கரமான பொருளுடன் உள்நுழைய முயன்ற பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி..!!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் டீ-56 ரக துப்பாகி மற்றும் வெடிமருந்துடன் நுழைய முயன்ற பொலிஸ் அதிகாரி விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் இடம்பெற்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு சிறப்பு ஒத்திகை நடைபெற்றுக்கொண்டிருந்தது.இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.அத்தோடு குறித்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பணியகத்துடன் தொடர்புடைய துணை ஆய்வாளர் ஆவார்.மேலும் இதை கொழும்பு பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.அத்தோடு வெடிமருந்துகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழைய முற்படுகின்றபோது பாதுகாப்பு படையினரால் அவர் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.மேலும் குறித்த சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு மார்ச் 01 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.அத்தோடு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.