தற்போது கிடைத்த செய்தி..இலங்கையில் மேலும் 10 பேரின் உயிரைப் பறித்தது கொரோனா..!!

இலங்கையில் இறுதியாக 10 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது.உயிரிழந்தோர் தொடர்பான விபரங்கள் வருமாறு, கொழும்பு − கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 74 வயதான ஆண்ணொருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்,இன்று உயிரிழந்துள்ளார்.

வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 82 வயதான பெண்ணொருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்துள்ளார்.களுத்துறை பகுதியைச் சேர்ந்த 58 வயதான பெண்ணொருவர், கடந்த 16ம் திகதி அவரது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.வஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த 72 வயதான பெண்ணொருவர்,தனது வீட்டிலேயே கடந்த 16ம் திகதி உயிரிழந்துள்ளார்.பிபில பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆணொருவர், கண்டி வைத்தியசாலையில் கடந்த 19ம் திகதி உயிரிழந்துள்ளார்.குருதலாவ பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஆணொருவர், முல்லேரியாவ வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.பிடகோட்டே பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஆணொருவர் கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 19ம் திகதி உயிரிழந்துள்ளார்.குடாகல்கமுவ பகுதியைச் சேர்ந்த 83 வயதான ஆணொருவர், குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 14ம் திகதி உயிரிழந்துள்ளார்.இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 90 வயதான ஆணொருவர், பிம்புர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆணொருவர், IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.