இலங்கையை இரண்டு மாநிலங்களாக பிரித்து இந்தியாவுடன் இணைந்து செயற்பட முடியும்..!! சிவாஜிலிங்கம் எச்சரிக்கை..!

பாரதீய ஜனதா கட்சியை இலங்கையில் ஆரம்பிக்க இடமளிக்க விடவில்லை என்றால் இலங்கையை தமிழ் மாநிலம், இலங்கை மாநிலம் என இரண்டாக பிரித்து இரண்டு ஆளுநர்களின் கீழ் கொண்டு வந்து, தமிழ் பிரதிநிதிகள் புது டெல்லியின் நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியும் என வட மாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரித்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகள், உலகம் முழுவதும் ஆரம்பிக்கப்பட முடியுமானால், பாரதீய ஜனதா கட்சியின் கிளையை ஏன் இலங்கையில் ஆரம்பிக்க முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும்;பாரதீய ஜனதா கட்சியின் சின்னமான தாமரை பூஜை பொருள் என்பதால், இடமளிக்க முடியாது என்றால், வேறு சின்னத்தை தெரிவு செய்ய முடியும்.இந்தியா, அமெரிக்க போன்ற நாடுகளுக்கு எதிராக இலங்கையின் ஆட்சியாளர்கள் செயற்படக் கூடாது.அப்படி நடந்ததால், அந்த நாடுகளின் இராணுவம் வடக்கு, கிழக்கிற்கு வந்து காணிகளை கைப்பற்றிக் கொள்ளும்.இந்திய – இலங்கை உடன்படிக்கையின் படி இலங்கையில் காணிகளை இந்தியாவின் அனுமதியின்றி எவருக்கும் வழங்க முடியாது.வடக்கில் உள்ள தீவுகளை சீனாவுக்கு வழங்கினால், அதற்கு எதிராக மக்களுடன் இடைவிடாத போராட்டத்தை ஆரம்பிக்க போவதாகவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.