யாழ்.நகரில் உள்ள டயலொக் நிறுவன பணியாளருக்கு கொரோனா !

யாழ்.நகரில் உள்ள டயலொக் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள டயலொக் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் பணியாற்றுபவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றையதினம் குறித்த பணியாளருக்கு தொற்று உறுதியான நிலையில் அந்த நிறுவன அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இதனையடுத்து நிறுவனத்தினால் யாழ்ப்பாணம் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் பணியாற்றுபவர்களுக்கு கொழும்பு தனியார் வைத்தியசாலை ஊடாக பிரிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.