திருடப்பட்ட சொந்த நாயை கண்டுபிடிக்க சென்ற இடத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்.!

இங்கிலாந்தில் வசிக்கும் நபர் ஒருவர் திருடுபோன தனது நாயை கண்டுபிடிக்க சென்று திருடப்பட்ட சுமார் 70 நாய்களை கண்டுபிடித்துள்ளார்.
டோனி க்ரோனின் என்ற நபர் தனது வீட்டில் வளர்ந்து வந்த ஸ்பானியல் வகை குட்டி நாய் உட்பட 5 நாய்கள் சமீபத்தில் காணாமல் போனது.அதனை கண்டுபிடிப்பதற்காக அவர் டிடெக்ட்டிவாகவே மாறி முழு வீச்சில் தனது நாய்களை தேடியுள்ளார்.இதுகுறித்து மெட்ரோ இங்கிலாந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டோனி க்ரோனின் தனது நாய்கள் இருக்கும் இடம் மற்றும் திருட்டுக்கு காரணமான குற்றவியல் கும்பல் பற்றிய தகவலைப் பெற்ற பின்னர், அவர் வேல்ஸ் எனும் நகரில் உள்ள கார்மார்டன்ஷையர் பகுதிக்குச் சென்றுள்ளார்.

அங்கு சுமார் 40,000 யூரோ டாலர்கள் அதாவது ரூ .40 லட்சம் வரை மதிப்புள்ள 70 நாய்களைக் கண்டுபிடித்தார்.
மேலும், அவர் கண்டுபிடித்த நாய்களில் லாப்ரடோர்ஸ், வெஸ்டீஸ், பக்ஸ் உள்ளிட்ட பல்வேறு ப்ரீட் வகைகள் இருந்ததாக கூறியுள்ளார்.
மேலும் அதில் தனது செல்லப்பிராணிகளில் ஒன்று திருடப்பட்ட மற்ற நாய்களின் நடுவில் தென்பட்டதாக கூறினார்.

இது குறித்து பேசிய அவர், இது போன்ற திருட்டுகளை எளிதில் கண்டறியமுடியாது என்பதால் அந்த கும்பல் தொடர்ந்து இதனை செய்துள்ளனர்.நாங்கள் சம்பவ இடத்தை அடைந்த போது வெஸ்டீஸ், லாப்ரடோர்ஸ், பக்ஸ் என அனைத்து நாய்களும் எங்களை நோக்கி ஓடி வந்து பைத்தியம் போல் குறைக்க ஆரம்பித்தன.
அந்த நாய்களின் நடுவே என் சொந்த நாய்களில் ஒன்று என்னை நோக்கி ஓடி வந்தது. அது மிகவும் பயந்து இருந்ததாகவும் அவர் கூறினார்.க்ரோனின் டிடெக்ட்டிவாக மாறி தனது சொந்த நாய்களை தேடியதன் காரணமாகத்தான், இப்பொது சுமார் 70 நாய்கள் மீட்கப்பட்டது.

அதில், தற்போது 22 நாய்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நாய்கள் தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதேபோல சில நாட்களுக்கு முன்பு, அயர்லாந்தின் விக்லோ மலைகளில் வழிதவறி வந்த நாயைக் காப்பாற்றியதற்கும், சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு அந்த நாயை சுமந்து சென்றதற்கு ஒரு ஜோடி இணையத்தில் பாராட்டுக்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.