பிறந்த சிசுக்களை பராமரிக்கும் வைத்தியநிபுணர் “டாக்டர்.டீபாலின்” யாழ்ப்பாண வருகையின் பின்வெறும் 24 வாரங்களில் பிரசவமான சிசுவொன்று 97நாட்கள் நீண்ட சிகிச்சையின் பின், தாயுடன் நலமாக வீடு திரும்பியுள்ளது.

இதற்கு முன் யாழ். போதனா வைத்தியசாலை வரலாற்றில் இதுபோன்ற அரிய நிகழ்வு நடைபெற்றதில்லை என்பதுடன் வெறும் 24 வாரங்களில் குறைப்பிரசவத்தில் பிறந்த சிசுவொன்று மிகவும் நலமாக வீடு திரும்பியிருப்பது இலங்கை வரலாற்றில் புதிய மைல்கல் ஆகியுள்ளது.இந்தச் செய்தி தமிழ் மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், தாய்க்கும் குழந்தைக்கும் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.வைத்தியநிபுணர் “டாக்டர்.டீபாலின் சிறப்பான சிகிச்சையின் மூலம் தாயும் குழந்தையும் நலமாக வீடு திரும்பிள்ளது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இந்த அரிய சாதனையை நிகழ்த்திய வைத்திய நிபுணர் டீ.பால் அவர்களுக்கும் அவர்தம் மருத்துவக் குழுவினருக்கும் மிகுந்த பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதுடன், உங்கள் அபரிதமான சேவை தொடர்ந்து எமது தேசத்திற்கு கிடைக்க வேண்டுமெனவும் தமிழ் மக்கள் பிரார்த்திக்கிறார்கள்.