காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் கண்காணிப்பு நடவடிக்கைக்கு ஐவர் அடக்கிய குழு நியமனம்!!

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு அறிக்கையை தாக்கல் செய்ய ஐவர் அடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் சீமெந்து உற்பத்தி கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.அதற்கமைவாக அங்கிருக்கும் பயன்பாட்டுக்கு உதவாத பொருட்களை அகற்றி வளாகத்தை துப்பரவு செய்வதற்கு ஏற்ற நடவடிக்கையினை எடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்கவே குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.ஐவரடங்கிய குறித்த குழு வழங்கவும் பரிந்துரைகளின் அடிப்படையில், பயன்பாட்டுக்கு உதவாத பொருட்களை அங்கிருந்து அகற்ற கைத்தொழில் அமைச்சர் சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.