சற்று முன்னர் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு..!!

இலங்கையில் மேலும் 8 கொரோனா வைரஸ் தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றாளிகனின் எண்ணிக்கை 460ஆக உயர்ந்துள்ளது. நேற்று இரவு வரை 452 தொற்றாளிகள் இனங்காணப்பட்டிருந்தனர்.இதுவரையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 118 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, உலக நாடுகளிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், இது வரையில் 2,920,905 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 203,269 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.