யாழ். நல்லூர் கோவில் வீதியில் இன்று (20) காலை சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் மயக்கமடைந்த நிலையில், நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த முதியவர் திருநெல்வேலி சந்தைக்கு மரக்கறி வாங்கிச்சென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.