வேகக் கட்டுப்பாட்டையிழந்த வாகனம் புத்தளத்தில் கோர விபத்து..மயிரிழையில் உயிர் தப்பிய இலங்கை அமைச்சர்..!!

சிலாபம் – பள்ளம சேருக்கலையில் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணாண்டோ விபத்தில் சிக்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.அவர் பயணித்த ஜீப் ரக வாகனமே இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்; குறித்த ஜீப் ரக வாகனத்தில் பயணித்துக் கொண்டு இருந்த போது வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் சாரதி உள்ளிட்ட 3 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எவ்வாறாயினும், இராஜாங்க அமைச்சருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.