தற்போது கிடைத்த செய்தி..பேரூந்தில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த இளைஞன்.!! கொரோனா தொற்று உறுதி..!!

கெக்கிராவை -மரதன்கடவல எட்டவீரவெவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பேருந்தில் சென்றுகொண்டிருந்த போது திடீரென சுகவீனமுற்று உயிரிழந்துள்ளார்.

பேருந்துக்குள் இந்த இளைஞர் மயங்கி விழுந்துள்ளதுடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் போதே இறந்து விட்டதாக பிரதேசத்திற்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து அனுராதபுரம் வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இளைஞனுக்கு கோவிட் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.29 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.