இளம் தம்பதியின் விபரீத முடிவு..!! ஊரே சோகத்தில்..

மாத்தளையில் இளம் தம்பதி ஒன்று தீயிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வில்கமுவ -மீவாஓபே – நுககொல்ல பிரதேசத்தில் வீடு ஒன்றிற்கு முன்னால் இருந்த வர்த்தக நிலையில் இவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.நேற்று இரவு 10 மணியளவில் இவர்கள் தீயிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.உயிரிந்த கணவர் 27 வயதுடையவராகும். அவரது மனைவி 23 வயதுடையவராகும்.உயிரிழந்தவர்களின் சடலம் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் அந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் பிரேத பரிசோதனை இடம்பெற்றவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவர்கள் தற்கொலை செய்துக்கொண்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.