ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு தொற்று உறுதி!

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட நடு ஊற்று பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.


வெளிநாடு செல்வதற்காக கணவர் கொழும்பிற்கு சென்று வந்ததாகவும் இறுதியாக அவர் மத்திய கிழக்கு நாட்டுக்கு செல்வதற்காக கொழும்பில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேவேளை அவருடைய குடும்பத்தினருக்கு இன்று (18)மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் மனைவி மற்றும் பிள்ளைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த தகப்பன் உட்பட 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி ஏ. எம். எம்.அஜித் தெரிவித்தார்.