விரைவில் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளப் போகும் கோட்டாபய அரசு.!! ஆரூடம் சொல்லும் ரணில்..!

ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் இந்த ஆண்டின் நடு பகுதியில் கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளில் இருக்கும் தனக்கு நெருக்கமானவர்களிடம் ரணில் இந்த தகவல்களை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கும் போது, அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியாத அளவுக்கு பொருளாதார வீழ்ச்சியடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக தற்போதைய சந்தர்ப்பத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முனையக் கூடாது, தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியை சில காலங்களுக்கு கொண்டு நடத்த சந்தர்ப்பம் வழங்க வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.