இணுவில் கந்தசுவாமி ஆலயப் பூசகரின் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற நபருக்கு நேர்ந்த கதி..!! இன்று காலை நடந்த திகில் சம்பவம்..!!

யாழ்.இணுவில் கந்தசுவாமி கோவில் பூசகரின் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற நபர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டதன் பின்னர், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார். இன்று காலை குறித்த மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு நபர் ஒருவர் சென்ற விடயம் சீ.சி.ரி.வி கமராவில் பதிவான நிலையில் குறித்த நபர் துரத்தி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டதன் பின்னர், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளை திருடி மாட்டிய நபர் ஏறாவூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது அம்பலமாகியுள்ளது.