அமைச்சர்களின் குடும்பத்தவர்களுக்கு திருட்டுத்தனமாக கொரோனா தடுப்பூசி..? எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு..!

அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு திருட்டுத்தனமாக கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதாக காட்டிக்கொண்டு, இவ்வாறு குடும்ப உறுப்பினர்களுக்கு தடுப்புசி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.அதேவேளை, நாட்டின் கடைசி குடிமகனுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் வரை தான் தடுப்பூசி செலுத்திக்கொள்ள போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.