தற்போது கிடைத்த விசேட செய்தி..யாழ். பல்கலை மருத்துவ பீட மாணவன் உட்பட ஐவருக்கு வடக்கில் இன்று கொரோனா தொற்று உறுதி..!!

வடக்கில் இன்று 5 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 447 பேரின் பிசிஆர் மாதிரிகள் இன்று சோதனையிடப்பட்டன. இதில் 4 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.கிளிநொச்சி தொற்றுநோயியில் வைத்தியசாலையில் ஒருவர், பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று 491 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.இதில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட, யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட மாணவன் ஒருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.