சற்று முன்னர் கிடைத்த செய்தி…12 வயதுச் சிறுவன் உட்பட மேலும் 20 பேருக்கு கொரோனா..!!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 440 ஆக உயர்வடைந்துள்ளது.
ஏற்கனவே 420 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 20 பேர் அடையாளம் காணப்பட்டனர்.இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 440 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களுள் ஏழு நோயாளிகள் கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையிலிருந்து தனிமைப்படுத்தலுக்காக கண்டகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க தெரிவித்தார்.சுகாதார இயக்குநர் ஜெனரல் மேலும் கூறுகையில், 12 வயது குழந்தைக்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதற்கிடையில், வெலிசறை கடற்படை முகாமில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலும் நான்கு கடற்படை வீரர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்ததாக சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.மேலும், ஒருவர் மொனராகல பகுதியிலும் இனங்காணப்பட்டுள்ளார்.இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கையில் 116 பேர் குணமடைந்ததோடு 7பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில இலங்கையில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் அபாய வலயங்களாக கருதப்பட்ட மாவட்டங்களிலும் 27ம் திகதி முதல் தளர்த்தப்படும் என அறிவித்த நிலையில், மீண்டும் அமுல்ப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.