இலங்கையில் ஒரே நாளில் 11,700 பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை!!

நாட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் 11,700 பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்றைய நிலவரப்படி, மூன்று படைகளின் கீழ் இயங்கும் 89 செயற்பாட்டு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 9,099 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.நாட்டில் இதுவரை 77,184 பேர் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதில் 70,429 பேர் ழுழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.இந்நிலையில் 6,346 பேரே இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.