கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி செய்த குடும்பத்தில் இருக்கும் கல்லூரி மாணவனுடன் 45 வயது பெண்மணி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் காந்தி கொலனியை சேர்ந்த 45 வயது பெண்மணி ஒருவர் வாழ்ந்து வருகிறார்.இவருக்கும் பெயிண்டிங் வேலை செய்யும் இவரின் கணவருக்கும் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு மகளும், 10ம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும் உள்ளனர்.

கணவரின் வருமானத்தில் குடும்பத்தை நடத்த முடியாத அந்த பெண்மணி அக்கம் பக்கத்தினர் பலரது உதவியை நாடி குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தார் இவர்களுக்கு பல உதவிகளை செய்து ஒரு குடும்ப உறுப்பினர் போலவே மாறியுள்ளனர்.இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு உதவி செய்து வந்த வீட்டில் இருந்த 21 வயது கல்லூரி படிக்கும் இளைஞரை காணவில்லை. அதே நேரம் இந்த 45 வயது பெண்ணையும் காணவில்லை.ஊர் மக்களும் குடும்பத்தாரின் தேடுதலில் அந்த கல்லூரி இளைஞரும், 45 வயது பெண்மணியும் தனித்தனி ஆட்டோவில் காந்தி காலணியில் இருந்து ஆசாரிப்பள்ளம் பஸ் நிறுத்ததுக்கு வந்ததும், அங்கிருந்து 2 பேரும் மினி பஸ்சில் நாகர்கோவிலுக்கு சென்று எஸ்கேப் ஆகி உள்ளது தெரியவந்தது.இதுகுறித்து கல்லூரி மாணவனின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்ததின் பெயரில், தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். அப்போதுதான் மாணவனுக்கும், அந்த பெண்ணுக்கு கள்ளக்காதல் நடந்து வந்தது தெரியவந்தது.மேலும், 45 வயது பெண் இரவு நேரம் வந்துவிட்டால், தனது மகள், மகனை அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கும், கணவரை இன்னொரு உறவினர் வீட்டிற்கும் கட்டாயப்படுத்தி அனுப்பியபின், தன் கள்ளக்காதலான கல்லூரி மாணவனுடன் வீடியோ காலில் விடிய விடிய பேசுவார்களாம். இதை அறிந்த பெண்ணின் மகள் கண்டித்து உள்ளதாகவும், மகளை சமாதானபடுத்திவிட்டு, மீண்டும் தாய் கள்ளக்காதலை தொடர்ந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன.உதவி உபத்திரவமாக மாறிய இந்தச் சம்பவம் காந்தி காலனியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.