இலங்கையில் 3 முறை PCR பரிசோதனையை நிராகரித்த பெண்ணுக்கு நடந்த சோகம்..!!

கம்பளை பொது சுகாதார பரிசோதகர்களினால் மூன்று தடவைகளை PCR பரிசோதனை செய்ய முயற்சித்த போதும் தடை ஏற்படுத்தியமையினால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கம்பளை, கஹட்பிட்டிய தேவராஜ மாவத்தை பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.கொவிட் தொற்றுக்குள்ளாகி தெல்தெனிய சிகிச்சை நிலையத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 51 வயதுடைய குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.கம்பளை நகர சபையில் பதிவான முதல் கொவிட் மரணம் இதுவாகும்.பொது சுகாதார பரிசோதகர்கள் மூன்று முறை PCR பரிசோதனை மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.எனினும் குறித்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.எதிர்ப்பிற்கு மத்தியில் ஒரு பகுதியினருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 8 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.