நிலைமைகளை தீவிரமாக கைக்கொள்ளாவிட்டால் நாட்டில் இன்னுமொரு கொரோனா அலை ஏற்படும் ஆபத்து!!

நாட்டு மக்கள் சுகாதார ஆலோசனைகளை கருத்திற்கொள்ளாமல் பாதுகாப்பற்ற முறையில் செயற்பட்டால் நிட்சயமாக இன்னும் ஒரு கொவிட் அலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமைக்கமைய மக்கள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் இந்த நிலைமை ஏற்படும் என சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.பிரித்தானியாவில் பரவும் புதிய மாறுபாடுடைய கொவிட் 19 வைரஸ் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது வரையிலும் கொழும்பு நகர சபை எல்லைக்குள் இந்த கொவிட் வைரஸ் தொற்றிய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதனை தொடர்ந்து நிலைமை ஆபத்தாகியுள்ளது.
பிரித்தானியாவில் பரவிய கொவிட் மாறுபாடு தொற்றிய நபர்களுக்கு அருகில் செயற்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் தற்போது வரையிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.இதேவேளை, PCR பரிசோதனை முடிவுகள் தாமதமாகி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.