கொரோனாவின் பாரிய அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இத்தாலியிலுள்ள இலங்கையர்களுக்கு வழங்கப்படும் முக்கிய அறிவிப்பு..!!

தற்போதைய கொரோனா தொற்று நிலைமையை கவனத்தில் எடுத்துள்ள இலங்கை அரசாங்கம் இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு புதிய சேவையை வழங்க முன்வந்துள்ளது. இதன்படி இணைய வழி முன் நியமன முறைமையை இலங்கை மக்களுக்காக மிலானில் உள்ள இலங்கை உதவித் தூதரகத்தில் வெளிநாட்டு அமைச்சு மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளது.தற்போதுள்ள கொவிட்-19 தொற்றுநோயைத் தணிக்கும் வகையில், தேவையான சுகாதார முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றி, ரோம் மற்றும் மிலானுக்கு வெளியே தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நடமாடும் கொன்சியூலர் சேவைகளும் நடாத்தப்படும்.தற்போது நிலவும் கொவிட்-19 உலகளாவிய தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலைகளிலும் கூட, இத்தாலியில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் பொது மக்களுக்கு தொடர்ந்தும் சேவைகளை வழங்கி வருகின்றன.