பாடசாலை ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி..இழுத்து மூடப்பட்ட பாடசாலை..!!

ஹட்டன் பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவருக்கு கோவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து தொற்று நீக்கும் வரை இன்று முதல் பாடசாலையை தற்காலிகமாக மூட தீர்மானித்துள்ளதாக ஹட்டன் – டிக்கோயா நகர பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். கோவிட் தொற்றாளரான ஆசிரியை மற்றும் அவரது காதலருக்கு திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக அவர்கள் நேற்றைய தினம் டிக்கோயா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றுள்ளனர்.அப்போது அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், இருவருக்கும் கோவிட் வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கோவிட் தொற்றுக்கு உள்ளான ஆசிரியை வலப்பனை பகுதியிலும், காதலன் பொகவந்தலாவையிலும் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.கோவிட் தொற்றாளரான ஆசிரியை அண்மையில் பாடசாலைக்கு சென்று கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், 6ஆம் ஆண்டு முதல் 11ஆம் வரை அவர் பாடங்களை நடத்தியுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் கூறியுள்ளனர்.குறித்த பாடசாலையில் சுமார் ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன் 40 ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வருகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.