சாதாரண தர பரீட்சை தொடர்பாக வெளியாகி உள்ள முக்கிய அறிவித்தல் !

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மேலதிக வகுப்புகள் , மாநாடுகள், முன்னோடிப் பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தர பரீட்சை எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.

அதற்கமைய, பரீட்சைக்கான முன்னோடி பயிற்சிக்குரிய வினாத்தாள்களை அச்சிடுதல், பகிர்ந்தளித்தல், கையேடுகளை விநியோகித்தல், இலத்திரனியல் ஊடகங்களினூடாக தகவல்களை பரிமாறுதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி தொடக்கம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தடை உத்தரவை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.