நாட்டை முழுமையாக முடக்க வேண்டிய எந்த தேவையும் கிடையாது..அமைச்சர் சுதர்ஷனி

புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டை முழுமையாக முடக்க வேண்டிய அவசியமில்லை என COVID – 19 தொற்று தொடர்பிலான இராஜாங்க அமைச்சர், வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போதைய நிலமையின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்புடன் நடந்துகொள்வது அவசியம் என விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.