அனைத்து இலங்கையர்களுக்கும் பெரும் நிம்மதி தரும் தகவல்.இன்னும் 07 நாட்களில் இலங்கைக்கு வரப் போகும் ஐந்து லட்சம் கொரோனா தடுப்பூசிகள்..!!

இலங்கையில் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக கொள்வனவு செய்யப்பட்ட 5 இலட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் அடுத்த ஏழு நாட்களில் நாட்டை வந்தடையும் என கொவிட் 19 வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த வாரம் சில நாட்களுக்குள் இதன் முதல் தொகுதி நாட்டை வந்தடையும் என அந்த மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் மார்ச் மாதத்தில் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.இதேவேளை, ஜனவரி 29ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் இலங்கையில் ஒரு இலட்சத்து 89 ஆயிரத்து 349 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.