இலங்கை மக்களுக்கு ஆறுதல் தரும் செய்தி..கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு..!!

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 68 ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்த மேலும் 865 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.இதனையடுத்து குறித்த எண்ணிக்கை உயர்வடைந்ததாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 852ஆக அதிகரித்துள்ளது.மேலும் இலங்கையில் இதுவரை 384 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.