தற்போது கிடைத்த விசேட செய்தி..வடக்கில் இன்று இதுவரை மட்டும் 17 பேருக்கு கொரோனா!!

வடக்கில் இன்று இதுவரை 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ் போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் இன்று 379 மாதிரிகள் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டன. இதில் 17 பேருக்கு தொற்று உறுதியானது.
வெள்ளாங்குளம் தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 5 பேர், மன்னார் சுகாதார வைத்தியஅதிகாரி பிரிவில் ஒருவர், வவுனியா பொது வைத்தியசாலையில் ஒருவர், பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.