சட்டவிரோத மணல் அகழ்வு தகராறில் நடந்த பயங்கரம்.!! ஒருவர் ஸ்தலத்தில் பலி.!! மேலும் மூவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில்..!!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இரு குழுக்களிடையே பரஸ்பர மோதலில் ஒருவர் பலியானதுடன்,மேலும் மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் கிராமத்தினைச் சேர்ந்தஇரண்டு தரப்புக்கு இடையிலான முறுகல் நிலை வாள்வெட்டில் முடிந்துள்ளது.மணல் அகழ்வு தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடே வாள் வெட்டில் முடிந்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியாசலையில்அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன்,மேலும் மூவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததுடன், மேலும் சிலரை பொலிசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.