வெள்ளவத்தையில் கட்டிடத்திலிருந்து தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிழந்த இளைஞன்..!!

வெள்ளவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய கட்டடம் ஒன்றிலிருந்து கீழே விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 7.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அந்த நபர் கட்டடத்தில் பணியாற்றும் நபர் அல்ல என்ன தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் 30 வயதுடைய நபராகும். எனினும் அவரது அடையாளங்கள் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.வெள்ளவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.