இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 83 வயதுடைய பெண் ஒருவரும் ஹபராதுவை பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவரும், நிட்டம்புவ பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவரும், நீர்க்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரும், கண்டி பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் நாராங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.