60 வருடங்களின் பின்பு உறைந்து போன கடல்!! உலுப்பியெடுக்கும் கடும் குளிர்..!!வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

பிரித்தானியாவை கடும் குளிர் தாக்கி வரும் நிலையில், பல இடங்களில் மயினஸ் 20 மற்றும் மயினஸ் 23 என உறையும் குளிர் காணப்படுகிறது. ஏரிகள், குளங்கள் மற்றும் நீர் தேக்கங்கள் ஏற்கனவே உறைந்து விட்டது.
இருப்பினும் கடலில் காணப்படும் உப்பு காரணமாக கடல் நீர் பொதுவாக உறைவது இல்லை. ஆனால் வழமைக்கு மாறாக கடும் குளிர் காரணமாக நோத் கம்பிரியா மாநிலத்தில் உள்ள பல கடற்கரைகள் உறைந்து விட்டது.இதனால், கடலில் அலைகள் எதுவும் இல்லாமல் போயுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.சுமார் 60 வருடங்களுக்கு முன்னரே இவ்வாறான கடும் குளிர் நிலவியதாக கூறப்படுகிறது. தற்போது 60 ஆண்டுகள் கழித்து கடல் அங்கே உறைந்து பனிக் கட்டியாகியுள்ளது.