இலங்கையில் கடந்த நான்கு நாட்களில் 100 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
முதல் 100 நோயாளர்கள் பதிவாவதற்கு சுமார் 57 நாட்களும், இரண்டாவது 100 நோயாளர்கள் பதிவாவதற்கு 19 நாட்களும், மூன்றாவது 100 நோயாளர்கள் பதிவாவதற்கு 8 நாட்களும் கடந்துள்ளன.அதாவது முதல் 200 நோயாளிகள் 76 நாட்களிலும், இரண்டாவது 200 நோயாளிகள் வெறும் 12 நாட்களிலும் பதிவாகியுள்ளனர்.இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியவர்களின் மொத்த எண்ணிக்கை 417 ஆக உயர்வடைந்துள்ளது.