யாழில் அந்தியேட்டி நிகழ்வொன்றில் வழங்கபப்ட்ட பொருள்: பலரையும் ஈர்த்த சம்பவம்

அந்தியேட்டி நிகழ்வில் பெரும்பாலும் நினைவுமலர் வழங்கபடுவதுண்டு. இந்நிலையில் போது யாழில் நினைவுமலரோடு வீட்டுத்தோட்டத்திற்கான விதைகள் வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


யாழ்ப்பாணம் சுன்னாகம் கிழக்கை சேர்ந்த அமரர் வைத்திலிங்கம் நவராசாவின் 31 ம் நாள் அந்தியேட்டி நினைவஞ்சலி இன்று இடம்பெற்றது.

இதன் போது அவரது நினைவாக தேவையற்ற பொருட்களை வழங்காது நினைவுமலரோடு இணைத்து வீட்டுத்தோட்டத்திற்கான விதைகள் வழங்கி வைக்கப்பட்ட நிலையில், இது அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுடன், வீட்டுத்தோட்ட செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக அவர்களின் செயல்பாடு அமைந்துள்ளதாக பலரும் கூறிவருகின்றனர்.