நாட்டில் வேகமாகப் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து தற்போது விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை..!!

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் கொழும்பு, அவிசாவளை, பியாகம மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளிலும் பரவியிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

உள்ளூரில் பெறப்பட்ட மாதிரிகளை ஆராய்ச்சி செய்த போது, பிரித்தானியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட பி .1.1.7 எனப்படும் கொரோனா வைரஸ் திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் இயக்குநர் டொக்ரர் சந்திம ஜீவசுந்தர தெரிவித்துள்ளார்.ஜனவரி மாதத்தில் இலங்கையில் பெறப்பட்ட மாதிரிகள வரிசைப்படுத்திய போது, பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட B.1.1.7 உருமாறிய வைரஸ் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில் பரவிய B.1.411 வைரஸினாலேயே ஜனவரியில் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர்.ஏனைய கொரோனா வைரஸ்களை விட பிரித்தானியாவின் உருமாறிய வைரஸ் 50% அதிக பரவுதலைக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.அவர்களின் கண்டுபிடிப்புகள் குறித்த அறிக்கை சுகாதார அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.வெளிநாட்டு நிபுணர்களும் B.1.1.7 உருத்திரிபடைந்த வைரஸ் அதிவேகமாக பரவுமென எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட வைரஸ் எப்படி நாட்டிற்குள் நுழைந்தது என்பதை கண்டறிவது கடினமானது என்றார். கடுமையான தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் இருந்தபோதிலும் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவரிடமிருந்து இது நாட்டிற்குள் நுழைந்திருக்கலாம் அல்லது இலங்கையிலேயே பிறழ்ந்து வளர்ந்திருக்கலாம் என்றார்.உருத்திரிபடைந்த புதிய வைரஸ் இலங்கைக்குள் உருவாகக்கூடிய அதிக வாய்ப்பு உள்ளது. வைரஸ் அதிகமாக பரவும் போது, பிறழ்வடைகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்