தற்போது கிடைத்த செய்தி..வடக்கில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று..!!

வடக்கில் இன்று 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம், யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடம் ஆகியவற்றில் 689 பேரின் பிசிஆர் மாதிரிகள் இன்று சோதனைக்குள்ளாக்கப்பட்டன.இதில், மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவர், முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், முல்லைத்தீவு 59 படையணி முகாமில் 3 பேர், புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர், யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.