கொரோனாவின் தீவிரத்தினால் அனைத்துப் பயணிகள் விமான சேவைகளும் தற்காலிகமாக இரத்து!!

ஸ்ரீலங்கன் விமான சேவையின் அனைத்துப் பயணிகள் விமான சேவைகளும் தற்காலிகமாக தொடர்ந்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மே மாதம் 15 ஆம் திகதி வரையில் இவ்வாறு தொடர்ந்து விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.இதேவேளை தேவைப்படும் பட்சத்தில் விமான சேவையின் பொதி பரிமாற்ற சேவைகள் இடம்பெரும் என்றும் இதற்காக விசேட விமானங்கள் தொடர்ந்து இயங்கும் என்றும் அறிவித்துள்ளது.மேலதிக தகவல்களுக்கு, பயணிகள் தங்களது பயண முகவரை அல்லது அருகிலுள்ள இலங்கை எயார்லைன்ஸ் அலுவலகம் அல்லது இலங்கை விமான சேவையின் 24 மணி நேர தொடர்பு மையத்தை + 94117771979 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதேவேளை இதற்கு முன்னர் வெளியிட்டுள்ள பதிவில், ஶ்ரீலங்கன் விமானத்தில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.அதற்கமைய, விமான நிலையங்களுக்குள் வரும்போதும், விமானங்களில் பயணிக்கும் போதும் முகக் கவசம் அணிவது உடன் அமுல்படுத்தப்படுவதாக அந்நிறுவனம் டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.