இலங்கையின் மத்திய பகுதியில் தொடரும் நில அதிர்வுகள்.!! பெரும் பீதியில் பொதுமக்கள்..!!

பசறை, மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எகிரிய பிரதேசத்தில் சிறியளவிலான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 4.53 மணியவில் நில அதிர்வு உணரப்பட்டதாக பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார்.மிகவும் சிறிய அளவிலான நில அதிர்வே உணரப்பட்டுள்ளது. அது ஒரு ரிக்டர் அளவில் பதிவாகியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த பிரதேசத்தில் இதற்கு முன்னர் இரண்டு சந்தர்ப்பங்களில் இவ்வாறான நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 22 ஆம் திகதி அதிகாலையில் சிறிய நில அதிர்வு உணரப்பட்டது.அதேபோன்று கடந்த 31ஆம் திகதியும் இவ்வாறு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த அதிர்வு சுமார் 30 விநாடிகள் நீடித்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.