அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவும் நிம்மதி தரும் செய்தி..இன்னும் இரு வாரங்களின் இறுதியில் தினமும் ஆறு லட்சம் பேருக்கு கிடைக்கப் போகும் வரப்பிரசாதம்..!!

எதிர்வரும் மார்ச் மாதம் முதல் தினமும் 6 லட்சம் பேருக்கு கோவிட் -19 தடுப்பு ஊசி மருந்துகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சின் செயலாளர் விசேட மருத்துவ நிபுணர் அமல் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.ஊசி மருந்து தொகை இலங்கைக்கு கிடைக்கும் அளவில், இந்த விடயத்தில் மாற்றம் ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் 4 ஆயிரம் மையங்களில் கோவிட் -19 தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன.இதனிடையே மருத்துவ மற்றும் தாதி மாணவர்கள் உட்பட பலருக்கு கோவிட் -19 தடுப்பூசி மருந்துகளை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு அமைய இது குறித்து ஆராய்ந்து வருவதாக கோவிட் -19 தடுப்பு மற்றும் ஆரம்ப சுகாதாரம் தொடர்பான ராஜாங்க அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.