கௌரவ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமாகிய அங்கஜன் இராமநாதனின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினருமாகிய கந்தையா வைத்தியநாதன் அவர்களுடைய மகன் புருசோத் மற்றும் அவரது மனைவி ஜியா லியு ஆகியோர் சுமார் 7000 அமெரிக்க டொலர்கள் (இலங்கை மதிப்பில் சுமார் 14 லட்சம் ரூபா) பெறுமதியான வைத்திய பாதுகாப்பு உபகரணங்களை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.
அறுவைச் சிகிச்சை கையுறைகள், 1000 N95 முகமூடிகள், 5000 அறுவை சிகிச்சை முகமூடிகள் ஆகிய பொருட்கள் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.இந்த இக்கட்டான காலத்திலும் அங்கஜன் இராமனாதனின் முயற்சியால் விஷேட விமானம் ஒன்று மூலம் இலங்கைக்கு இந்தப் பொருட்கள் எடுத்துவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.