நான்கு வருடக் காதல் கைகூடி திருமண முகூர்த்தம் நெருங்கும் வேளை..சந்தோசமாக விருந்த மாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

தான் காதலித்த இளைஞன் உடன் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், வரவேற்பு நிகழ்ச்சி முடிவந்ததும் மணப்பெண் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியா-சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியார் ஷோ ரூம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.மேலும், இந்நிலையில், முகப்புத்தக மூலம் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் அந்தபெண்ணிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.அத்தோடு நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில், நான்கு வருடங்கள் இருவரும் காதலித்துவந்தனர். அதன் பின்னர், இருவரின் வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதனையடுத்து, வில்லிவாக்கம் பகுதியில் இன்று திருமணம் நடைபெற நிச்சயம் செய்யப்ட்டிருந்தநிலையில், நேற்றிரவு, இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அந்தஇளம்பெண், திடீரென திருமணத்திற்கு முன்னர் மாயமாகியுள்ளார்.அத்தோடு மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி உதவியுடன் உறவினர்கள் ஆராய்ந்து பார்த்த போது, முச்சக்கர வண்டியொன்றில் ஒன்றில் இளைஞர் ஒருவருடன் மணப்பெண் ஏறிச் சென்றது தெரிய வந்தது.
இதனிடையே, மாப்பிள்ளை அதிகம் மனமுடைந்து போன நிலையில், மாப்பிள்ளையின் வீட்டாரும் வேதனையடைந்துள்ளனர்.அதன்பிறகு தான், மேலுமொரு அதிர்ச்சி தகவல், இரு வீட்டாருக்கும் கிடைத்துள்ளது. ஃபேஸ்புக் காதலனை கரம் பிடிக்க காத்திருந்த இளம்பெண், வேறொரு இளைஞருடன் கிண்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.மேலும், இரண்டு இளைஞர்களையும் ஒரே நேரத்தில் தான் காதலித்ததாகவும்,அதில் தான் இன்று திருமணம்செய்யவிருந்த இளைஞரை விட, மற்றொரு இளைஞருடன், தான் வாழ ஆசைப்படுவதாகவும், இதனால் அவருடன் என்னை சேர்த்து வைக்குமாறும் போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளையில், மறுபக்கம், தன்னை காதலித்து ஏமாற்றி, திருமணம் வரை கொண்டு வந்து ஏமாற்றி மோசடிசெய்ததாக காதலி மீது மாப்பிள்ளை புகாரளித்துள்ளார்.மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படியும், தனது புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.