குருந்தூர் மலையின் சர்ச்சை முடிகிறது..வெளிப்பட்டது சிவலிங்கம்!!

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடைபெற்ற அகழ்வாய்ச்சியில் கிடைத்த தொல்லியல் சிதைவுகளில் காணப்படும் சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை ( எட்டு முகம்) தாரா லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் திரு.NKS திருச்செல்வம் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். இது சிவபூமி தான்.எதிலும் அடித்து உறுதியாய்ச்சொல் தமிழா இது சிவபூமி தான்.
குருந்தூரில்புத்தரைத்தேடி புற்றரைகளை கிண்டினார்கள் எட்டிப்பார்த்தது எட்டுப்பட்டை ( எட்டு முகம்) தாரா லிங்கம். என்னப்பன் எங்கும் நிறைந்தவன் ஈசன்தான் .உண்மைகள் உறங்காது
எங்கள் தாண்டவமாடிடும் ஆதியோகியின் மண்ணிது மடியாது.
திருமூலர் என்ற பெருஞ்சித்தன் சொன்னான் இது சிவபூமியென்று..
ஆயிரத்தெட்டு சிவலிங்கங்கள் விதைத்தஎன் பெரும்பாட்டன்
இராவணனின் மண்ணைசிவபூமி எண்டு..
என் மார்பைத்தோண்டினாலும் லிங்கம் இருக்கும்,
என் மண்ணைத்தோண்டினாலும் லிங்கம் இருக்கும்.
ஆதியில் சைவன் வாழ்ந்த ஈழம்.அதுவே தமிழன் தாய்மண் ஆகும்.

– முக நூலிலிருந்து.