குருந்தூர் மலையில் புத்தரைத் தேடிய தொல்லியல் திணைக்களத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!! தோண்டும் இடமெல்லாம் சிவலிங்கம்..!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அகழ்வு ஆராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படும் குருந்தூர் மலையில் தொல்லியல் ஆய்வில் லிங்கமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குருந்தூர் மலை தமிழர்களின் சிவபூமி என்பதை நிரூபிக்கும் வகையில், இந்த லிங்கம் வெளிப்பட்டதாக பலரும் கூறிவருகின்றனர்.ஆதி சிவபூமி என்பதை நிரூபிக்கும் வகையில் முல்லைத்தீவு குருந்தூர் மலையில் சிவலிங்கவழிபாடு இடம்பெற்றதை உறுதிப்படுத்தும் முகமாக தொல்லியல் ஆய்வில் லிங்கமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புத்தரை தேடி அகழ்வாராய்ச்சி செய்த தொல்லியல் திணைக்களம் சிவனை கண்டெடுத்து அது சிவ பூமி என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக சமூகவலைத்தளவாசிகள் கூறுகின்றனர். இதேவேளை குருந்தூர் மலை பௌத்தர்களுக்கு உரியது என கூறி தேரர்கள் சர்ச்சையை கிளப்பிய நிலையில், குறித்த பகுதி தொல்லியல்திணைக்களத்திற்குரியது என அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.