தென்னிலங்கையில் மீண்டும் தீவிரம் பெறும் கொரோனா..!!திருமண நிகழ்வுகளுக்கு மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகள்..!!

கம்பஹா, உடுகம்பளை திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 136 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.இதன் காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய நிகழ்வுகள் மற்றும் திருமணங்களில் ஒன்று கூடுபவர்களின் எண்ணிக்கையை 50 ஆக மட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவு அவதானம் செலுத்தியுள்ளது.அதற்கமைய சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய முன்னர் குறிப்பிடப்பட்டிருந்த 50 பேர் வரையான எண்ணிக்கைக்கு மட்டுப்படுத்துதவற்கு திட்டமிடப்பட்டுள்ளது.நேற்றைய தினம் சுகாதாரக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.