தற்போது கிடைத்த செய்தி..தனியார் வங்கி ஊழியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 21 பேருக்கு வடக்கில் கொரொனா தொற்று உறுதி..!!

வடக்கில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் இருவர் யாழ்ப்பாண பல்கலைகழகத்தை சேர்ந்தவர்கள் 5 பேர் நானாட்டானிலுள்ள தனியார் வங்கி ஊழியர்கள் ஆவார்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 295 பேரினதும், யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 481 பேரின் மாதிரிகளும் சோதனையிடப்பட்டன.யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கலைப்பீடம், நுண்கலை பீடத்தில் கற்கும் மட்டக்களப்பு,பதுளையைச் சேர்ந்த இருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதேபோல, மன்னார் நானாட்டானிலுள்ள எச்.என்.வி வங்கியின் 5 ஊழியர்களும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். வங்கி விடுதியில் தங்கியிருந்து பணியாற்றுகிறார்கள்.நானாட்டான் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் மன்னார் நகரைச் சேர்ந்த 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.இன்று நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரும், மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், மன்னார் பொது வைத்தியசாலையில் ஒருவரும், கிளிநொச்சி கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும்,உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.