விகாராதிபதியின் ஏ.ரி.எம் ஐ திருடி பெருமளவு பணத்தைத் திருடிய பௌத்த பிக்கு அதிரடியாகக் கைது..!!

விகாராதிபதி ஒருவரின் வங்கி அட்டையை திருடி பணத்தை எடுத்த குற்றச்சாட்டில் மற்றொரு பௌத்த பிக்குவையும், அயல்வீட்டுக்காரையும் தங்கொட்டுவ பொலிசார் கைது செய்துள்ளனர்.அவர்கள் 361,000 ரூபா பணத்தை திருடியுள்ளனர். தனியார் வங்கியொன்றில் விகாராதிபதி கணக்கை பராமரித்து வந்தார். விகாரையிலுள்ள மற்றொரு பிக்கு வங்கி அட்டையை திருடி அயல்வீட்டுக்காரரிடம் கொடுத்துள்ளார். அவர் வங்கியில் பணத்தை திருடியுள்ளார்.பணம் திருட்டுப் போனது குறித்து விகாராதிபதி அளித்த முறைப்பாட்டையடுத்து, பொலிசார் நடத்திய விசாரணையில், இன்று இருவரும் கைது செய்யப்பட்டனர்.இருவரும் மாரவில மாவட்ட நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்படவுள்ளனர்.